என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமைச்சர் கேஎன் நேரு"
சேலம்:
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் அரசு சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
இதில் அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் மழை அதிகமாக பெய்து, சென்னை மாநகரம் பெரிய அளவில் பாதித்தது. சென்னையை போன்று பல்வேறு நகரங்களும் பாதிக்கின்ற நிலை ஏற்பட்டது. அந்த பகுதிகளில் எல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் கிட்டத்தட்ட 500 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். ஆனால், இந்த முறை அதே அளவுக்கு மழை பெய்தும் கூட 3 பேர் தான் அவர்களுடைய உடல் நலமின்மை காரணமாக தான் இறந்தனர்.
ஓரிரு இடங்களை தவிர மற்ற இடங்களில் ஒரே நாளில் நீரை அகற்றி பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கின்றது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறி முதற்கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுத்து இருக்கிறார். சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். நகராட்சி நிர்வாக துறைக்கு பேரீடர் தொகையாக ரூ.300 கோடி வழங்கி உள்ளார். கிட்டத்தட்ட ரூ.1000 கோடிக்கு முதல்-அமைச்சர் அனுமதி அளித்து இருக்கிறார்.
ஒருவர் 5 ஆண்டு காலம் ஒரே இடத்தில் குடியிருக்கிறார் என்றால் அந்த இடத்திற்கு அவருக்கு பட்டா வழங்க வேண்டும் என ஏற்கனவே தலைவர் கலைஞர் சொல்லி இருக்கிறார். எனவே உங்களிடம் வாங்கிய மனுக்களுக்கு உரிய முறையில் பரிசீலித்து நல்ல தீர்வு மாவட்ட நிர்வாகம் வழங்கும். உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
குறைதீர்க்கும் முகாமில் தி.மு.க. மாவட்ட துணை அமைப்பாளர் மல்லிகா திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக நிர்வாகிகள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதையும் படியுங்கள்...20 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்